காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

 

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

வடக்கு காஷ்மீரில் கல் வீசுதல் மற்றும் பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்போது யாரும் ஈடுபடுவதில்லை என்று மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி தெரிவித்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை அங்கு, உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத குழுக்களில் இணைந்து தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவது,, கல் வீசுதல், பந்த் போன்றவை அடிக்கடி போன்றவை அடிக்கடி நிகழ்ந்து வந்தது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைய தொடங்கி விட்டன.

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்
சுதந்திரமாக சாலையில் செல்லும் காஷ்மீர் பெண்கள்

உதாரணமாக வடக்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை ஒரே ஒரு இளைஞர் மட்டுமே துப்பாக்கியை ஏந்தியதாக வழக்கு பதிவாகியுள்ளது. வேறு எந்தவொரு கல் வீச்சு சம்பவங்களோ அல்லது பந்த் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக கிலோ போர்ஸ் (வடக்கு காஷ்மீர்) ஜி.ஓ.சி. மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2021ம் ஆண்டில் இதுவரை ஒரே ஒரு உள்ளூர் இளைஞர் மட்டுமே துப்பாக்கியை ஏந்தியதாக வழக்கு பதிவானது. அந்த இளைஞரும் 5 நாட்களில் சரண் அடைந்தார்.

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்
மனோஜ் சின்ஹா

இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுடனும் நாங்கள் இணைந்து செயல்படுவது வடக்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு குறைவதை உறுதி செய்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் வடக்கு காஷ்மீர் நிலவரம் அமைதியாக மற்றும் நிலையானதாக உள்ளது. கல்வீசுதல் மற்றும் பந்த் போன்றவை நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் இல்லை. பள்ளத்தாக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சமானியர்கள் மிகவும் அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், காஷ்மீரின் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பேட்டி ஒன்றில், அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவீத காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் என் கவனம் இருக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.