இனிமேல் கரண்ட் கட்டானால் புகார் கொடுக்க யோசிப்பேன்… ஆனந்த் மகிந்திரா…

 

இனிமேல் கரண்ட் கட்டானால் புகார் கொடுக்க யோசிப்பேன்… ஆனந்த் மகிந்திரா…

இனிமேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் புகார் கொடுக்க யோசிப்பேன் என்றதோடு அதற்கான காரணத்தையும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தது தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

நம் நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். ஆனந்த் மகிந்திராவை டிவிட்டரில் நாம் பாலோ செய்தாலே போதும் உலக விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். அண்மையில் மும்பையில் மின்சாரம் கட்டான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனிமேல் கரண்ட் கட்டானால் புகார் கொடுக்க யோசிப்பேன்… ஆனந்த் மகிந்திரா…
ஆனந்த் மகிந்திரா

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மும்பைவாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் ஆனந்த் மகிந்திராவோ இனி மின்சாரம் துண்டிக்கப்பட்டால் புகார் கொடுக்க யோசிப்பேன் என தெரிவித்தார். இது தொடர்பாக ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில், மீண்டும் புகார் செய்தவற்கு முன்பு இந்த உயர் கம்பியில் ஆபத்தான காரியத்தை செய்யும் மனிதரின் பாதுகாப்பு குறித்து சந்திப்பேன் என பதிவு செய்து இருந்தார். அதனுடன் தயானந்த் காம்ப்ளி என்பவர் போஸ்ட் செய்து இருந்த வீடியோ ஒன்றை ரீடிவிட் செய்து இருந்தார்.

இனிமேல் கரண்ட் கட்டானால் புகார் கொடுக்க யோசிப்பேன்… ஆனந்த் மகிந்திரா…
உயர் அழுத்த மின் கம்பியில் பழுது பார்க்கும் பணியாளர்

55 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், மும்பைக்கு மின்சாரம் வழங்கும் உயர் அழுத்த மின் லைனில் ஒரு குறையை சரிசெய்வதை காட்டியது. நல்ல காலை நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், கம்பிக்கு கீழே சறுக்கிய சென்ற தொழிலாளி அந்த லைனில் உள்ள குறையை சரி செய்தார். அந்த கம்பிக்கும், தரைக்கும் இடையிலான தூரத்தை பார்த்தால் மிகவும் ஆபத்தானதாக தோன்றியது. ஆனந்த் மகிந்திரா ரீடிவிட் அந்த வீடியோ மின்சார பணியாளர்களின் வேலை எவ்வளவு ரிஸ்க்கானது என்பதை பல்வேறு தரப்பினருக்கும் புரிய வைத்தது.