லாக்டவுன் தளர்வுகளால் வாகன விற்பனை அமோகம்… மகிந்திரா விற்பனை 2 மடங்கு வளர்ச்சி

லாக்டவுன் தளர்வுகளால் வாகன விற்பனை அமோகம்… மகிந்திரா விற்பனை 2 மடங்கு வளர்ச்சி

பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் கடந்த ஜூலை மாதத்தில் மகிந்திரா, அசோக் லேலண்ட் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 21,046 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜூலை மாத விற்பனையை காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகமாகும். அந்த மாதத்தில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 11,025 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

லாக்டவுன் தளர்வுகளால் வாகன விற்பனை அமோகம்… மகிந்திரா விற்பனை 2 மடங்கு வளர்ச்சி
அசோக் லேலண்ட் வாகனங்கள்

இந்துஜா குழுமத்தை சேர்ந்த வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் 8,650 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 4,776 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் வாகன விற்பனை 81 சதவீதம் அதிகரித்துள்ளது.

லாக்டவுன் தளர்வுகளால் வாகன விற்பனை அமோகம்… மகிந்திரா விற்பனை 2 மடங்கு வளர்ச்சி
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

எய்ஷர் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன தயாரிப்பு பிரிவு ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 44,038 புல்லட்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜூலை மாதத்தை காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு மொத்தம் 40,334 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.