முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

 

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

புதன் பகவானுக்குரிய தெய்வமான மகாவிஷ்ணுவை வணங்குவதற்கு உரிய நாளாக புதன்கிழமை சொல்லப்படுகிறது.
பல தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமங்கள் இருந்தபோதும் சகஸ்ரநாமம் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஷ்ணு சகஸ்ரநாமமே. இந்நாளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை படித்து முக்தி பெறலாம்.

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!


ஒவ்வொரு யுகத்திலும் முக்தியை அடைய மாறுபட்ட வழிகள் வகுக்கப்பட்டிருந்தன என்கிறது விஷ்ணுபுராணம். கிருத யுகத்தில் தியானம் தவம் ஆகியவற்றின் மூலமும் திரேதாயுகத்தில் வேள்விகள் மூலமும் துவாபரயுகத்தில் விக்கிரக ஆராதனையின் மூலமும் முக்தி என்னும் நன் நிலையை அடையலாம். ஆனால், கலியுகத்தில் இத்தனை சிரமங்களும் முயற்சிகளும் தேவையில்லை. கடவுளின் திருநாமங்களை சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்தாலே முக்தி கிட்டும் என்கிறது புராணம். கெடும் இடராயவெல்லாம் கேசவா' என்பது ஆழ்வாரின் அமுதமொழி. இப்படி பகவானின் நாம மகிமைகளைச் சொல்லி ஆராதிக்கவே அம்புப்படுக்கையில் படுத்தபடி பீஷ்மாசார்யர். அந்த ஆதிமூலத்தின் ஆயிரம் நாமத்தை நமக்காக உபதேசித்துள்ளார். அதுவே,விஷ்ணு சகஸ்ரநாமம்’ ஆகும்.

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!


குருக்ஷேத்திரப்போரில் பீஷ்மர் அர்ச்சுனன் வில்லால் தாக்கப்பட்டு வீழ்ந்தார். உத்தராயனப் புண்ணியகாலம்வரை அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் குருதி கசியும் உடலோடு பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசித்தார். பீஷ்மர் ஒரு புண்ணிய புருஷர். ஆனாலும் துரியோதனின் அரசில் பங்கேற்று அவன் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்ததால் உண்டான பாவங்களைப் போக்கிக்கொள்ள பீஷ்மர் இவ்வாறு அம்புப்படுக்கையில் வீழ்ந்தார் என்பது ஐதீகம்.

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

அதேவேளையில் எல்லோருக்கும் தன்னைப்போல மனதிடமும் ஆன்ம பலமும் இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாக சாமானியர்களும் வாழ்வில் எளிதில் கடைப்பிடித்து மேன் நிலையை அடைய தர்மங்களை உச்சரித்ததுடன், தம் பாவங்களைப் போக்கிக்கொள்ளவும், உலக மக்கள் உய்வு பெறவும் விஷ்ணுவின் சகஸ்ர நாமங்களையும் எடுத்துரைத்தார்.

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

கண்ணன் உரைக்க அர்ச்சுனன் கேட்டது கீதை என்றால் பீஷ்மர் உரைக்கக் கண்ணன் உடனிருந்து கேட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லிய காரணத்தினால் தன் பாவங்கள் நீங்கப் பெற்ற பீஷ்மரின் மேனியை, வியாச மகரிஷி சூரிய தேவனுக்குரிய எருக்கம் இலைகளால் அலங்கரித்தார். அந்த நிலையிலேயே சூரிய தேவனை வணங்கி பீஷ்மர் தியானத்தில் ஆழ்ந்து முக்தியும் பெற்றார்.

-வித்யா ராஜா