போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி ஜி.. உத்தவ் தாக்கரே

போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி ஜி.. உத்தவ் தாக்கரே

போராட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அதில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கலந்து கொண்டார். கோவிட்-19 இரண்டாவது அலைக்கு மத்தியில் பெரிய கூட்டங்கள் கூடுவது தொடர்பாக மோடியிடம் உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்தார்.

போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி ஜி.. உத்தவ் தாக்கரே
முதல்வர் உத்தவ் தாக்கரே

பிரதமர் மோடியிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: சில அரசியல்வாதிகள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். கோவிட்-19 இரண்டாவது அலைக்கு மத்தியில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றும்படி அந்த அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி ஜி.. உத்தவ் தாக்கரே
மோடியுடன் முதல்வர்கள் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தடுப்பூசி சரியான நேரத்தில் விநியோக்கப்படுவதற்கும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கும் ஒரு பணிக்குழுவை மகாராஷ்டிரா அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் கலந்துரையாடினர்.