எனது சகாக்களின் போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… உத்தவ் தாக்கரே

 

எனது சகாக்களின் போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… உத்தவ் தாக்கரே

எனது சகாக்களின் (அமைச்சர்கள்) போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் உத்தவ் தாக்கரே அரசு இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் டான்வே அண்மையில் தெரிவித்தார். மேலும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், இயற்கைக்கு மாறான கூட்டணி ஆட்சி கவிழ்வதற்காக காத்திருக்கவில்லை என்றும், வரலாறு ரீதியாக இது போன்ற அரசுகள் 4-5 ஆண்டுகள் நீடித்தது இல்லை என்று தெரிவித்தார்.

எனது சகாக்களின் போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… உத்தவ் தாக்கரே
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள்

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது: நான் எனது அனைத்து அமைச்சர்களையும் நம்புகிறேன்.

எனது சகாக்களின் போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… உத்தவ் தாக்கரே
சரத் பவார்

எனது சகாக்களின் போன்களை ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் அனைவரும் உண்மையில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். இந்த அரசு உறுதியானது. இந்த அரசுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் சிறப்பாக பணியாற்றுவதால் அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில், பல இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட போதிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. எங்கள் மாநில அரசாங்கத்தில், அனைவரும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கா கடுமையாக உழைத்தனர் என்று தெரிவித்தார்.