செல்வமழை கொட்ட புண்ணியமிக்க புரட்டாசி அஷ்டமியில் மகாலட்சுமி விரதம்!

 

செல்வமழை கொட்ட புண்ணியமிக்க புரட்டாசி அஷ்டமியில் மகாலட்சுமி விரதம்!

செல்வமழை கொட்டும் பெருமாளுக்கு மட்டும் உகந்தமாதமல்ல புனிதமிக்க புரட்டாசி மாதம்.செல்வங்களின் தேவதையாக விளங்கும் மகாலட்சுமி தாயாருக்கும் சிறப்பான மாதமாக உள்ள புரட்டாசி அஷ்டமியில் விரதமிருந்தால் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள் மகாலட்சுமி.

செல்வமழை கொட்ட புண்ணியமிக்க புரட்டாசி அஷ்டமியில் மகாலட்சுமி விரதம்!

அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமாக உள்ள மகாலட்சுமி தாயாரை புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் மகாலட்சுமி விரதம். ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

செல்வமழை கொட்ட புண்ணியமிக்க புரட்டாசி அஷ்டமியில் மகாலட்சுமி விரதம்!

தங்களது சக்திக்கு ஏற்றவாறு ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம் என நினைத்தபடியே வணங்குவது நல்ல பலனைத் தரும்.

செல்வமழை கொட்ட புண்ணியமிக்க புரட்டாசி அஷ்டமியில் மகாலட்சுமி விரதம்!

கருட வாகனத்தில் அமர்ந்தவளும், கோலாசுரனுக்கு பயத்தை அளித்தவளும், சர்வ பாவங்களையும் போக்குபவளான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். எல்லோருக்கும் வரங்களை அளிப்பவளும், துஷ்டர்களுக்குப் பயத்தை அளிப்பவளும், சர்வ துக்கங்களைப் போக்குபவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். சித்தி-புத்தியை அளிப்பவளும், போகம், மோட்சம் ஆகியவற்றைக் கொடுப்பவளும், மந்திர மூர்த்தியும், எப்போதும் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். ஆதியந்தம் இல்லாதவளும், தேவியும், முதல் சக்தியும், மகேஸ்வரியும், யோகத்தினால் உண்டானவளும், யோகத்துக்குப் பலமுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம் என மனமுருகி வணங்குகள். வீட்டில் மகாலட்சுமி தேவியை நிரந்தரமாக வாசம் செய்து, தாயாரின் ஆசியை பெறுங்கள்.

-வித்யா ராஜா