கிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் : திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

கிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் : திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை மதுரவாயல் – துறைமுகம் மேம்படுத்தும் பணியை விரைந்து முடிக்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

கிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் : திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் மேம்படுத்தும் பணியை விரைந்து முடிக்க கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் எம்எல்ஏ மா.சுப்ரமணியம், வாகை சந்திரசேகர் உட்பட சுமார் 2 ஆயிரம் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் துறைமுகம் இடைய பறக்கும் விரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் சுற்றுசூழல் காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த 2012 ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பமாகின. 4 வழியாக அமைக்க திட்டமிடப்பட்ட இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது, மதிப்பீடு ரூ.1, 815 கோடியாக தீர்மானிக்கப்பட்டது.

கிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் : திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

பின்னர் 4 வழிக்கு பதிலாக ஆறு வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு ரூ. 3,100 கோடி ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதற்கான மதிப்பீடு 5,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் இன்னும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதீயில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.