மதுரை – தேனி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்!

 

மதுரை – தேனி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்!

தேனி

மதுரை முதல் தேனி வரையிலான அகல ரயில்பாதையில் இன்று இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து தேனி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை – தேனி இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்!

இதனையொட்டி, மதுரையில் இருந்து சிறப்பு இன்ஜினில் புறப்பட்ட ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, ரயில் இன்ஜின் சுமார் 20 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.

தேனி ரயில் நிலையம் வந்தடைந்த ரயில் இன்ஜினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வரும் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.