தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை!

 

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இதுவரை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.

உலகையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டுக்கு ஆகிய 2 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் தடுப்பூசியும் போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்படும் ஒரு எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்திருக்கும் நிலையில் சென்னையில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை!

மதுரையை பொறுத்தவரை ராஜாஜி மருத்துவமனையிலு, மாநகராட்சி சுகாதார நிலையங்களிலும், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவ்வப்போது பற்றாக்குறை நிலவுவதால் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. எனினும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வின்றி நடைபெறுகிறது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநகராட்சி இளங்கோவன் தடுப்பூசி மையம் ஒரு லட்சம் தடுப்பூசி இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது. 1,00,000ஆவது நபருக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை இன்று மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்ட மாவட்ட அனீஸ் சேகர் தடுப்பூசி செலுத்தப்படுவதை பார்வையிட்டார். விரைவில் மதுரை மாவட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.