குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

மதுரை மாநகர காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் ‘பேஸ் டாக்கர்’ (FACETAGR) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ஆப் ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர் . இதில் முதற்கட்டமாக 2016 முதல் கொலை, நகைபறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை அவர்களின் முகங்களுடன் பதிவு செய்து கொள்வர். பின்னர் வாகன சோதனையின் போது குறிப்பிட்ட அந்த நபர் ஏதேனும் குற்றச்சம்பவங்களின் பின்புலத்தில் உள்ளவரா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த செயலி ஏற்கனவே சென்னையில் நடைமுறையில் உள்ளது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

இதுகுறித்து கூறும் துணை காவலர் ஆணையர் சிவபிரசாத், ”இந்த செயலி போலீசாருக்கானது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குற்றவாளிகளின் விபரங்களும் ‘அப்டேட்’ செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவ்வசதி சென்னையில் உள்ளது. குற்றவியல் வழக்குகள் பதிவாகும் போது, ​​தரவுத்தளம் ஒரு வழக்கமான அடிப்படையில் புதுப்பிக்கப்படும். இது தொடர்பாக நாங்கள் அண்டை மாவட்ட காவல்துறையினருடனும் பேசுகிறோம், இதனால் அவர்களின் குற்றவியல் தரவுத்தளத்தையும் உருவாக்கி, தற்போதுள்ளவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த செயலி மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய மாலைகண்ணன் என்பவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .