லாரி ஓட்டுநர் கைதை கண்டித்து நள்ளிரவில் காவல்நிலையம் முற்றுகை

 

லாரி ஓட்டுநர் கைதை கண்டித்து நள்ளிரவில் காவல்நிலையம் முற்றுகை

மதுரை

திருமங்கலம் அருகே கஞ்சா வியாபாரிக்கு பதிலாக லாரி ஓட்டுநரை போலீசார் கைதுசெய்ததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நள்ளிரவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடகோவில் சரகத்திற்கு உட்பட்ட பாரப்பத்தி பகுதியில், தூத்துக்குடியில் இருந்து கஞ்சா சப்ளை செய்வதாக போலீசாருக்கு

லாரி ஓட்டுநர் கைதை கண்டித்து நள்ளிரவில் காவல்நிலையம் முற்றுகை

தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்ட கூடகோவில் போலீசார், பாரப்பத்தி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மலைச்சாமியை கைதுசெய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,

லாரி ஓட்டுநர் கைதை கண்டித்து நள்ளிரவில் காவல்நிலையம் முற்றுகை

உண்மையான குற்றவாளிகளான தூத்துக்குடியை சேர்ந்த 2 நபர்களை
போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஆளை மாற்றி கைதுசெய்ததுடன், அவரை சரமாரியாக தாக்கிய காவல்துறையை கண்டித்து கிராம மக்கள் கோஷம் எழுப்பினர். இதனை அடுத்து மலைச்சாமி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.