ஊரடங்கை மீறி கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் : வருத்தம் தெரிவித்த காவல் ஆணையர்!

தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை தனது வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் வெளியிட்டார் .

மதுரையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள ஆட்டோக்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராமகிருஷ்ணன் என்று ஆட்டோ ஓட்டுநர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை கட்டணம் வசூலிக்காமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது மதுரை கோரிப்பாளையம் போக்குவரத்து சந்திப்பில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கை மீறி ஆட்டோ இயக்கியதற்காக 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் எவ்வளவு சொல்லும் அவர்கள் கேட்பதாக இல்லை.

madurai

இதனால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணிக்கு உதவி சென்ற இடத்தில் போலீசார் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை தனது வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் வெளியிட்டார் . அந்த வீடியோவானது இணையத்தில் வைரலானது.

prem anand sinha

இதைக்கண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக தொடர்பு கொண்டு அவரிடம் காவலர்கள் நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்ததோடு அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் ரத்து செய்தார்.

Most Popular

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...
Do NOT follow this link or you will be banned from the site!