வாடிவாசலில் சீறி பாயும் காளைகள் ; விறுவிறுப்பாக நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

வாடிவாசலில் சீறி பாயும் காளைகள் ; விறுவிறுப்பாக நடக்கும்  பாலமேடு ஜல்லிக்கட்டு!

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் தொடங்கியது.

வாடிவாசலில் சீறி பாயும் காளைகள் ; விறுவிறுப்பாக நடக்கும்  பாலமேடு ஜல்லிக்கட்டு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் முதலில் உறுதிமொழி ஏற்றனர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடி வாசலில் சீறிப் பாய்ந்தன. மாகாலிங்கசாமி உள்ளிட்ட 7 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் சீறி பாயும் காளைகள் ; விறுவிறுப்பாக நடக்கும்  பாலமேடு ஜல்லிக்கட்டு!

பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ஐஜி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

வாடிவாசலில் சீறி பாயும் காளைகள் ; விறுவிறுப்பாக நடக்கும்  பாலமேடு ஜல்லிக்கட்டு!

முன்னதாக பார்வையாளர்கள் முக கவசம் அணியாமல் கூட்டத்தில் ஆர்ப்பரித்து கூச்சலிட்டு கொண்டிருந்த நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தினர். போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்கள் ,காளைகளுக்கு டிவி, பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். சிறந்த காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசு மாடும் ,சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும். இதனால் இளைஞர்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணிவரை நடைபெற இருக்கிறது.