கம,கமக்கும் ‘மதுரை’ மட்டன் சால்னா

 

கம,கமக்கும் ‘மதுரை’ மட்டன் சால்னா

மதுரையில் உள்ள எந்த அசைவ ஓட்டலுக்குப் போனாலும் “மட்டன் சால்னா” கம,கமக்கும்.பரோட்டாவுக்கும், பிரியாணிக்கும் இந்த சால்னாவைத் தருவார்கள்.வாய்க்கு ருசியான அந்த மட்டன் சால்னாவை மற்ற ஊர்க்காரர்களும் செய்யலாம்.
தேவை:ஆட்டுக்கறி – கால் கிலோ, துவரம் பருப்பு – 3 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி, மஞ்சள்

கம,கமக்கும் ‘மதுரை’ மட்டன் சால்னா

தூள் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1 தேக்கரண்டி, தண்ணீர் – 1 கப், உப்பு – தேவையான அளவு.
அரைப்பதற்கு:தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி, சோம்பு- அரை தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, மிளகு – அரை தேக்கரண்டி.
தாளிப்பதற்கு: எண்ணெய் – 3 ஸ்பூன், பட்டை- சிறிது, கிராம்பு – 2 ஏலக்காய் – 2 பிரியாணி இலை – 1
செய்முறை:முதலில் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

கம,கமக்கும் ‘மதுரை’ மட்டன் சால்னா

அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு பொடிதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

கம,கமக்கும் ‘மதுரை’ மட்டன் சால்னா


பின்னர் மட்டனை சேர்த்து 2 நிமிடம் கிளறி, மட்டன் நிறம் மாற ஆரம்பித்ததும், துவரம் பருப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.பிறகு தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.,
மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி, மீண்டும் சில நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி!

  • இர.போஸ்