தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!

 

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!

மதுரை

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, 2-வது ஆண்டாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதனையொட்டி, மேலூரில் உள்ள அழகர் கோயில் ஆடி வீதியில அமைக்கப்பட்டிருந்த செயற்கை வகை ஆற்றில் வைகை ஆற்றின் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது.

தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்!

இதனை அடுத்து, காலை 8.30 மணியளவில் பச்சைப்பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணைந்து கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவிலலை. நாளை மறுதினம் காலை 10 மணிக்கு மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும், ஏப்ரல் 30ஆம் இரவு பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.