தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

 

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

மதுரை

தேவர் குருபூஜை விழாவையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்ட தங்க கவசம், விழா நிறைவடைந்ததை அடுத்து இன்று வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார். 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்கக்கவசம்

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

ஆண்டுதோறும் தேவர் குருபூஜையின் போது, அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 58-வது குருபூஜை விழா கடந்த 23ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதனையொட்டி, கடந்த 23ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு எடுத்துச்செல்லப்பட்ட தங்க கவசம், குருபூஜை நிறைவடைந்த நிலையில் மதுரை

தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுர் ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், மதுரை ஆட்சியர் அன்பழகன், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.