‘சாத்தான்குள சம்பவம் போல இனிமேல் நடக்கக்கூடாது’..வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில், இரட்டை கொலை வழக்குத் தொடர்பாக சரமாரியான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். மேலும், சாத்தான்குளம் சம்பவம் போன்ற இனிமேல் எந்த சம்பவமும் நடக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Most Popular

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது....

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!