காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பெண் வக்கீல்… இறுகும் நீதிமன்றத்தின் பிடி – நாளை இறுதி முடிவு!

காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பெண் வக்கீல்… இறுகும் நீதிமன்றத்தின் பிடி – நாளை இறுதி முடிவு!

சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் அவர் மீதும் அவரது மகள் ப்ரீத்தி மீதும் வழக்குபதிவு செய்தனர். இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பெண் வக்கீல்… இறுகும் நீதிமன்றத்தின் பிடி – நாளை இறுதி முடிவு!

இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புகார்கள் இல்லாமல் தாமாக முன்வந்து தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

காவலர்களிடம் வாக்குவாதம் செய்த பெண் வக்கீல்… இறுகும் நீதிமன்றத்தின் பிடி – நாளை இறுதி முடிவு!

என்ன நடைமுறை உள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதி தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார். வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும் வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரப்பப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.