கனிம வளங்கள் எடுக்க புதிய டெண்டர்… இடைக்கால தடைவிதித்து உத்தரவு!

 

கனிம வளங்கள் எடுக்க புதிய டெண்டர்… இடைக்கால தடைவிதித்து உத்தரவு!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கான, புதிய டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார் தர்மபுரி மாவட்டத்தில் 17 குவாரிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 குவாரிகளும் அமைக்க ஜனவரி 21ஆம் தேதி புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் எடுக்க புதிய டெண்டர்… இடைக்கால தடைவிதித்து உத்தரவு!

ஏற்கெனவே அதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்களுக்கான விதிகளையும், சுற்றுச்சூழல் விதிகளையும் பின்பற்றாமல், மீண்டும் புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நூறு கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கிடும் வகையிலும் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தாமரைச்செல்வன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.