பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்!

 

பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்!

மத்திய பிரதேச மாநில இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அமைத்த 13 மாதங்களில் உட்கட்சி மோதலால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.

பாஜக பெண் வேட்பாளரை ஐட்டம் என விமர்சித்த முன்னாள் முதல்வர்!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த இமார்தி தேவி என்பவர் மத்திய பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தாப்ரா தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தாப்ராவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற பிரசாரத்தில் கமல்நாத் பேசிய போது, இமார்தி தேவியை ஐட்டம் எனும் வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார். இதற்கு தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தலைவரின் இதுபோன்ற பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த வீடியோவில் உள்ள பேச்சு முழுமையாக அவதூறான ஒன்று. பெண்களை வேண்டுமென்றே இழிவாக பேசுவதாகும். பெண்கள் அதிகஅளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் பெண் அரசியல்வாதியை மற்றொருவர் இதுபோன்று அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல. மிகவும் பொறுப்பான பதவியை வகித்த ஒருவர் இதுபோன்று பெண்களை பற்றி பேசியது மிகவும் வருத்தத்துக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.