மீண்டும் மிரட்டும் கொரோனா… பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய பிரதேசம்

மீண்டும் மிரட்டும் கொரோனா… பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய பிரதேசம்

ஏப்ரல் 15ம் தேதி வரை சத்தீஸ்கருடான பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை உருவாகி உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் மத்திய பிரதேசத்தில் புதிதாக 3,722 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் 18 பேர் கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளனர்.

மீண்டும் மிரட்டும் கொரோனா… பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய பிரதேசம்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, குஜராத் உள்ளிட்டவை இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக சத்தீஸ்கருடான பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

மீண்டும் மிரட்டும் கொரோனா… பயணிகள் பஸ் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய பிரதேசம்
மாஸ்க் அணிவது கட்டாயம்

பொதுமக்களின் நலன் கருதி, ஏப்ரல் 15ம் தேதிவரை, சத்தீஸ்கருக்கான பயணிகள் பஸ் சேவை மற்றும் சத்தீஸ்கரிலிருந்து மத்திய பிரதேசத்துக்கான பயணிகள் பஸ் சேவை தற்காலிகாக ரத்து செய்யப்படுகிறது. பொதுஇடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பது கிரிமினல் குற்றத்துக்குள் வரும். மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.