மத்திய பிரதேசத்தில் வருகிறது மத சுதந்திர சட்டம்… கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை

மத்திய பிரதேசத்தில் வருகிறது மத சுதந்திர சட்டம்… கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை

மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராக மத சுதந்திர சட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சட்டத்தின்படி, கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அண்மை காலமாக லவ் ஜிஹாத் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் லவ் ஜிஹாத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக சட்டங்களை உருவாக்கி அமல்படுத்த தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச அரசு சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டம் 2020 நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்துக்கு அம்மாநில கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அது கடந்த மாதம் இறுதியில் அமலுக்கு வந்தது.

மத்திய பிரதேசத்தில் வருகிறது மத சுதந்திர சட்டம்… கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை
லவ் ஜிஹாத்

தற்போது மத்திய பிரதேச அரசும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக மத சுதந்திர சட்டத்தை உருவாக்கியுள்ளது. எதிர்வரும் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு தாக்கல் செய்ய உள்ளது. திருமணத்தின் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் மோசடி வாயிலாகவோ மதம் மாற்றினால், மத சுதந்திர சட்டத்தின்கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

மத்திய பிரதேசத்தில் வருகிறது மத சுதந்திர சட்டம்… கட்டாய மத மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில் மாநிலத்தின் புதிய மத சுதந்திர சட்டம் என்பது எனது அரசின் மகளை காப்பாற்றும் மிஷனாகும். திருமணத்தின் மூலமாகவோ அல்லது யாரையும் கவர்ந்திழுப்பதன் வாயிலாகவோ வேறு எந்த மோசடி வழிகளிலும் யாரையும் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்துக்கு மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.