மத்திய பிரதேசத்தில் பசு வரி அறிமுகம் செய்ய திட்டம்… காங்கிரஸ் எதிர்ப்பு

 

மத்திய பிரதேசத்தில் பசு வரி அறிமுகம் செய்ய திட்டம்… காங்கிரஸ் எதிர்ப்பு

மத்திய பிரதேச அரசு புதிதாக பசு வரி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் பசு வரியால் வருவாய் மட்டும்தான் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பசு அமைச்சரவை உருவாக்கியுள்ளது இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில், மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பசு அமைச்சரவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என்று பதிவு செய்து இருந்தார்.

மத்திய பிரதேசத்தில் பசு வரி அறிமுகம் செய்ய திட்டம்… காங்கிரஸ் எதிர்ப்பு
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

அதன்படி, இந்தியாவின் முதல் பசு சரணாலயமான அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள காமதேனு கவ் அபாயரண்யாவில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பசு அமைச்சரவை சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம், விலங்குகள் தொடர்பான துறைகளின் அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர் இணைந்து அமைச்சர்கள் குழுவை (மந்திரி பரிஷத் சமிதி) உருவாக்கி பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் பசு வரி அறிமுகம் செய்ய திட்டம்… காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ்

மத்திய பிரதேச அரசு புதிதாக பசு வரியை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பசு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடுவதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பசு வரியால் மாநிலத்தின் வருவாய் மட்டும்தான் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.