மத்திய பிரதேசத்தில் மக்கள் ஊரடங்கை 15ம் தேதி நீட்டிப்பு.. இந்த மாசம் கல்யாணத்தை தவிருங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் மக்கள் ஊரடங்கை 15ம் தேதி நீட்டிப்பு.. இந்த மாசம் கல்யாணத்தை தவிருங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் மக்கள் ஊரடங்கை 15ம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் கல்யாண நிகழ்ச்சிகளை தவிர்க்கும்படி முதல்வர் சிவ்ராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு மக்கள் ஊரடங்கை மே 7ம் தேதி (இன்று) வரை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து மக்கள் ஊரடங்கை இம்மாதம் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக நேற்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் மக்கள் ஊரடங்கை 15ம் தேதி நீட்டிப்பு.. இந்த மாசம் கல்யாணத்தை தவிருங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்
ஊரடங்கு (கோப்புப்படம்)

கில் கொரோனா-2 பிரசாரத்தில் ஆன்லைன் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது: கோவிட்-19ஐ கட்டுப்படுத்த ஒரே வழி வைரஸின் பரிமாற்ற சங்கிலியை உடைப்பதே. எனவே மே 15 வரை மாநிலத்தில் உள்ள அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் அழியும் வரை நம்மால் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடியாது. ஆனால் பாதிப்பு விகிதம் 18 சதவீதத்தை தாண்டினால் நம்மால் அதை திறக்க முடியாது.

மத்திய பிரதேசத்தில் மக்கள் ஊரடங்கை 15ம் தேதி நீட்டிப்பு.. இந்த மாசம் கல்யாணத்தை தவிருங்க.. சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தின் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இன்னும் சில நாட்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும்.தங்களது வீட்டுக்குள்ளே இருப்பதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்த மாதம் முழுவதும் திருமணங்களும் பிற பொதுக்கூட்டங்களும் நடைபெறக்கூடாது. ஏனெனில் அவை சூப்பர் பரவல் நிகழ்வுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளன. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யாமல் இருக்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நெருக்கடிக்கு எதிரான ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது வேறுபாடுகளை பின்னர் பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.