மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கடந்த மார்ச் மாதத்தில் பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

சரி இனி யாரும் பா.ஜ.க. பக்கம் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த காங்கிரசுக்கு நேற்று பெரிய அடி விழுந்தது. படா மலஹாரா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பிரதியுமான் சிங் லோதி நேற்று போபாலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்த சந்திப்பின்போது மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மாவும் உடன் இருந்தார்.

எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி
எம்.எல்.ஏ. பிரதியுமான் சிங் லோதி

பிரதியுமான் சிங் லோதி பா.ஜ.க.வில் இணைந்ததால் காங்கிரஸ் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் தனது எம்.எல்.ஏ.க்கள் வேறுயாரும் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார்களோ என்ற கலக்கத்தில் காங்கிரஸ் உள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது லோதி பா.ஜ.க.வில் ஐக்கியமாகி உள்ளதால் மேலும் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...
Do NOT follow this link or you will be banned from the site!