2 பதவியிலும் நீங்களா? போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் தலைகள்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்கும் கமல் நாத்

 

2 பதவியிலும் நீங்களா? போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் தலைகள்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்கும் கமல் நாத்

மத்திய பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க கமல் நாத் தயாராகி வருவதாகவும், இதனால் விரைவில் அந்த பதவிக்கு காங்கிரசிலிருந்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது மற்றும் இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத்துக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு குரல் பலமாக எழுந்தது. கமல் நாத் தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இந்த இரண்டு பதவிகளில் ஒன்றிலிருந்து விலகி கமல் நாத் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

2 பதவியிலும் நீங்களா? போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் தலைகள்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்கும் கமல் நாத்
காங்கிரஸ்

இதனையடுத்து, நான் வீட்டில் இருக்க தயாராக இருக்கிறேன் என்று கமல் நாத் தெரிவித்தார். இந்நிலையில் கமல் நாத் மாநில தலைவர் பதவியை தனது வசம் வைத்துக்கொண்டு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு புதிய நபரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது. வரும் 28ம் தேதி மத்திய பிரதேச சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு ஒருநாள் முன் கமல் நாத் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் பெரிய முடிவு (ராஜினாமா) எடுக்கப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2 பதவியிலும் நீங்களா? போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் தலைகள்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்கும் கமல் நாத்
அகமது படேல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு பிறகு, மத்தியில் அரசியலில் கமல் நாத்தின் பங்கு அதிகரிக்கக்கூடும் என்றும், கட்சியின் தலைமையிலிருந்து அதிக பொறுப்புகளை அவர் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெரிய பொறுப்பை ஏற்க அவர் ஆர்வமாக இருப்பதால், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக கமல் நாத் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் கட்சியின் மாநில தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கமல் நாத் விரும்பும் நபரை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.