மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏழைகளுக்கு இலவசம்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏழைகளுக்கு இலவசம்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாத ஏழைகளுக்கு அது இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பா.ஜ.க. நேற்று தனது பீகார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முதல் மற்றும் முக்கிய வாக்குறுதியாக பீகார் மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஏழைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏழைகளுக்கு இலவசம்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு
சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புககள் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இந்த நோயை அரசாங்கம் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நிரந்தர சிகிக்சை தடுப்பூசிதான்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏழைகளுக்கு இலவசம்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு
பா.ஜ.க.

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கியபோது, அதனை தங்களால் வாங்க அதனை வாங்க முடியுமா என்று மக்கள் கேள்வி கேட்டனர். மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.