மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம்…. மத்திய பிரதேச அரசு ஒப்புதல்

மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம்….  மத்திய பிரதேச அரசு ஒப்புதல்

மத்திய பிரதேசத்தில் மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம் வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம்….  மத்திய பிரதேச அரசு ஒப்புதல்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

நமது பாதையின் இறுதி இலக்கு சிம்மானத்தில் ஏறுவது அல்ல. ஆனால் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதாகும். அதனை மனதில் வைத்து, சமூகத்தின் அனைத்து சுற்று வளர்ச்சிக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்காக குவாலியரில் ஒரு அரங்கம் கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாற்று திறனாளிகளுக்காக அவ்வாறு செய்யும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.

மாற்று திறனாளிகளுக்கான ஸ்டேடியம் கட்ட ஒரு ரூபாய்க்கு நிலம்….  மத்திய பிரதேச அரசு ஒப்புதல்
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நாளை (இன்று) முதல் ஒரு வாரம் காலம் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 37 லட்சம் ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு புரத உணவாக பால் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்கள் பழங்கள் வழங்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.