கொரோனாவை கட்டுப்படுத்த “வார் ரூம்” அமைக்கும் திமுக அரசு!

 

கொரோனாவை கட்டுப்படுத்த “வார் ரூம்” அமைக்கும் திமுக அரசு!

சென்னையைத் தொடர்ந்து கோவை, சேலம், மதுரை மற்றும் திருச்சியிலும் கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க” வார் ரூம் ” உருவாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாநகரில் ” வார் ரூம் ” விரைவில் அமைய உள்ளது என்று தெரிவித்தார். இது கோவை மக்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மக்களுக்கு அலைச்சல் இல்லாமல் மருத்துவ படுக்கை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் 18 முதல் 45 வயதிற்குட்டவர்களுக்கு ரூ. 46 கோடி முன் பணம் செலுத்தப்பட்டு 15 லட்சம் டோஸ் தடுப்பூசி கோரப்பட்டுள்ளது. அவற்றில்5 லட்சம் வந்துள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் சென்னையில் அவை செலுத்தும் பணி துவங்க உள்ளது.

Image

கொடிசியா 1500 கொரோனா பராமரிப்பு மையம் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. அதில் 700 தயார் நிலையில் உள்ளது. மேலும் 800 படுக்கைகள் அமைக்க உள்ளோம். கொடிசியாவில் 100 படுக்கைகள் வசதியோடு சித்தா , ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் 5 இடங்களில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இயற்கை சிகிக்கை கொரோனா தடுப்பு மையங்கள் முதல்வர் உத்தரவின் பேரில் அமைய உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 0 டிலே என்ற நிலையில் , ஆம்புலன்ஸில் வருவோரை உடனடியாக சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆணைப்படி கூடுதல் மருத்துவர்கள், செவிலியர் நியமிக்கபட உள்ளனர்” என தெரிவித்தார்.