‘அம்மா உணவகத்தை’ சூறையாடிய திமுகவினர் எந்த பொறுப்பிலும் இல்லை – மா.சுப்பிரமணியன்

‘அம்மா உணவகத்தை’ சூறையாடிய திமுகவினர் எந்த பொறுப்பிலும் இல்லை  – மா.சுப்பிரமணியன்

சென்னை முகப்பேறு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம நபர்கள், பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடினர். உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினர். நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

‘அம்மா உணவகத்தை’ சூறையாடிய திமுகவினர் எந்த பொறுப்பிலும் இல்லை  – மா.சுப்பிரமணியன்

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திமுகவினர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு எட்டியது. ஆத்திரமடைந்த அவர், பெயர் பலகையை உடைத்தெறிந்து அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

‘அம்மா உணவகத்தை’ சூறையாடிய திமுகவினர் எந்த பொறுப்பிலும் இல்லை  – மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் எந்த பொறுப்பிலும் இல்லை என்று கூறினார். அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளித்து இருப்பதாகவும் அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அம்மா உணவகம் தாக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வரும் நிலையில், அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.