திமுக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் பலி!

 

திமுக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் பலி!

ஓசூர் திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் மகன் கருணா சாகர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் திமுக எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர். பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உயிரிழந்தார். நள்ளிரவில் திமுக எம்எல்ஏ மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் உடன் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.

திமுக எம்எல்ஏ மகன் கார் விபத்தில் பலி!

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.