நாலே முக்கால் லட்சம் கொடுத்த வாலிபர் -நாமத்தை போட்ட கூட்டம் -பட்டதாரியின் பரிதாப கதை

நாலே முக்கால் லட்சம் கொடுத்த வாலிபர் -நாமத்தை போட்ட கூட்டம் -பட்டதாரியின் பரிதாப கதை

ஒரு பட்டதாரி வாலிபரிடம் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 4.75 லட்சம் ரூபாய் ஆட்டைய போட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்

நாலே முக்கால் லட்சம் கொடுத்த வாலிபர் -நாமத்தை போட்ட கூட்டம் -பட்டதாரியின் பரிதாப கதை

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள முல்ஷியைச் சேர்ந்த மகேஷ் ரவுத் என்ற 22 வயதான வணிகவியல் பட்டதாரி வாலிபர் படித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தார் .அவர் சில மாதங்களுக்கு முன்பு இணைய தளத்தின் மூலம் அமோல் போயர் என்ற 24 வயதான நபரையும் அவரது கூட்டாளி ஒருவரையும் சந்தித்தார் .அப்போது அவர்கள் மகேஷிடம் தங்களுக்கு மந்தராலயாவில் பல அதிகாரிகளை தெரியுமென்று கூறினார்கள் .மேலும் அவர்கள் மூலம் அவருக்கு அங்கு கிளார்க் வேலை வாங்கி கொடுப்பதாக சொன்னார்கள் .ஆனால் அதற்கு 4.75 லட்சம் பணம் கொடுக்கவேண்டுமென்று சொன்னார்கள் .
அதை உண்மையென்று நம்பிய மகேஷ் அவர்கள் கேட்ட அந்த பணத்தை அவர்களின் அக்கௌண்டுக்கு அனுப்பினார் .அந்த 4.75 லச்சம் பணம் அவர்களின் கைக்கு வந்ததும் அவர்கள் மகேஷின் தொடர்பை துண்டித்து விட்டார்கள் .
அதன் பிறகு மகேஷ் அவர்களை சந்தித்து வேலை விஷயமாக கேட்டபோது ,அவர்கள் கோர்ட்டில் தங்களின் வேலைக்கு தடை போட்டு விட்டதாக பொய் சொல்லி விட்டு ஓடிவிட்டார்கள் .அதை நம்பாத அவர் தனது பணத்தை திருப்பித் தரும்படி அவர்களிடம் கேட்டார்.ஆனால் இருவரும் அந்த பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர்.அதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேஷ் அந்த நபர்கள் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இருவரில் ஒருவரை கைது செய்து ,இன்னொருவரை பிடிக்க விசாரித்து வருகின்றனர் .

நாலே முக்கால் லட்சம் கொடுத்த வாலிபர் -நாமத்தை போட்ட கூட்டம் -பட்டதாரியின் பரிதாப கதை