வூகான் நகரில் கொரொனாவிலிருந்து மீண்டவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பாதிப்பு

வூகான் நகரில் கொரொனாவிலிருந்து மீண்டவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பாதிப்பு

2019 ஆம் ஆண்டின் டிசம்பரில் சீனாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பாதிப்பு இன்றளவும் உலகம் சந்தித்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனா பரவைத் தடுக்கப் போராடி வருகின்றன.

இந்திய நிலைமை இன்னும் மோசம். நேற்று முதன்நாள் உலகில் அதிகம் நோய்ப் பரவும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா இடம்பிடித்திருக்கிறது. இந்தியாவின் சின்னக் கிராமங்களிலும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

வூகான் நகரில் கொரொனாவிலிருந்து மீண்டவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பாதிப்பு

இந்நிலை கொரோனா வைரஸின் தாக்கம் முதலில் தென்பட்ட சீனா நாட்டின் வூகான் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வூகான் நகரில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் இறந்தார்கள். அங்கு 100 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு இது.

வூகான் நகரில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.

வூகான் நகரில் கொரொனாவிலிருந்து மீண்டவர்களில் 90 சதவிகிதத்தினருக்கு நுரையீரல் பாதிப்பு

மேலும், கொரோனா நோய்த் தொற்று அடைந்து அதிலிருந்து மீண்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சீனாவின் வூகான் நகர் இந்த ஆய்வு முடிவால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.