எல் அண்டு டி லாபம் 3 சதவீதம் உயர்வு… பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டு ரூ.18 வழங்க பரிந்துரை

 

எல் அண்டு டி லாபம் 3 சதவீதம் உயர்வு… பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டு ரூ.18 வழங்க பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,292.81 கோடி ஈட்டியுள்ளது.

அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,292.81 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும்.

எல் அண்டு டி லாபம் 3 சதவீதம் உயர்வு… பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டு ரூ.18 வழங்க பரிந்துரை
எல் அண்டு டி

2021 மார்ச் காலாண்டில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.48,087.9 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் அதிகமாகும்.

எல் அண்டு டி லாபம் 3 சதவீதம் உயர்வு… பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டு ரூ.18 வழங்க பரிந்துரை
எல் அண்டு டி

எல் அண்ட் டி நிறுவனம் பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.18 வழங்க பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது எல் அண்ட் டி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.21 சதவீதம் உயர்ந்து ரூ.1,415.50ஆக உயர்ந்தது.