நாடாளுமன்ற கேண்டீனில் இனி உணவு மானியம் கிடையாது… மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி

 

நாடாளுமன்ற கேண்டீனில் இனி உணவு மானியம் கிடையாது… மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி

நாடாளுமன்ற கேண்டீனில் இனி உணவு மானியம் அதாவது குறைந்த விலையில் சாப்பாடு கிடையாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் மற்றும் பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது. இதோடு நாடாளுமன்ற வளாக கேண்டீனில் மானிய விலையில் அதாவது குறைந்த விலையில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுவது குறித்து நீண்ட நாட்களாக விவாதங்கள் இருந்து வந்தது. சாமானிய மக்களுக்கு கிடைக்காத உணவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற கேண்டீனில் இனி உணவு மானியம் கிடையாது… மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி
ஓம் பிர்லா

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலும் நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதாவது இனி நாடாளுமன்ற கேண்டீனில் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படாது. எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் தொடர்பாக மக்களவை சபாநாயகா் ஓம் பிர்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வரும் 29ம் தேதியன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

நாடாளுமன்ற கேண்டீனில் இனி உணவு மானியம் கிடையாது… மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி
கேண்டீன்

நாடாமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலஙகளவை காலை 9 மணி முதல் 2 மணி வரையும், மக்களவை மதியம் 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். ஜீரோ நேரம் மற்றும் கேள்வி நேரம் நடைபெறும். மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் ரத்து செய்யப்படுவதால் ஆண்டுக்கு சுமார் ரூ.17 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.