“மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல்”- முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்!

 

“மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல்”- முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்!

அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிஏஜி அறிக்கையில் மின்சார கொள்முதலில் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தான் கூறப்பட்டு உள்ளதாகவும், ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மின்சார கொள்முதலில் திமுக பின்பற்றிய நடைமுறையை அதிமுக ஆட்சியில் பின்பற்றப்பட்டதாக கூறிய தங்கமணி, பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

“மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல்”- முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம்!

தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட அவர், இதனால் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்கியதாகவும் கூறினார். மேலும், மின்துறை சேவைத்துறை என்று குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த 7 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்த வில்லை என்றும், மேலும், மின்சாதன பொருட்களின் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்டவற்றால் கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், எந்த ஆட்சியானாலும் தணிக்கைத்துறை அறிக்கை அளிப்பது இயல்பான ஒன்றுதான் என்றும் தங்கமணி தெரிவித்தார்.