Home இந்தியா ஏழு பெண் குழந்தை பெற்ற மனைவி -ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் -இருவரும் சேர்ந்து செய்த வேலை

ஏழு பெண் குழந்தை பெற்ற மனைவி -ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் -இருவரும் சேர்ந்து செய்த வேலை

ஏழு பெண் குழந்தை பெற்ற மனைவி -ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் -இருவரும் சேர்ந்து செய்த வேலை

தனக்கு ஆண் குழந்தை இல்லாத ஒரு பெண், புதியதாக பிறந்த ஒரு ஆண் குழந்தையை திருடியதால் கைது செய்யப்பட்டார்

Gandhinagar baby theft


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்பெலியா என்ற நபரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று பிரசவ வலி எடுத்ததால் அவரை அங்குள்ள காந்திநகர் சிவில் மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தார்கள் .அப்போது அந்த பெண் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் .
அதை பனஸ்கந்தா பகுதியை சேர்ந்த 30 வயது அஸ்மிதா பாரதி என்ற பெண் நோட்டமிட்டார் .அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஏழு பெண் குழந்தைகள் இருந்ததால் அவர் ஒரு ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டார் .ஆனால் அவருக்கு ஆண் குழந்தையே பிறக்காததால் அவர் ஒரு ஆண் குழந்தையை திருடி எடுத்து செல்ல முடிவெடுத்தார் .அதன் படி அன்று ஆண் குழந்தையை பெற்ற அந்த பெண்ணிடம் வந்தார் .அதன் பிறகு அவரிடம் தன்னை ஒரு நர்ஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரிடம் தன்னுடைய குழந்தையை குளிப்பாட்ட கொடுத்தார் .அதன் பிறகு அவரை வீட்டிற்க்கும் அழைத்து சென்றார் .அதன் பிறகு அந்த பெண் அஸ்மிதா பாரதி அந்த வீட்டிலிருந்து அந்த புதிதாக பிறந்த ஆண் குழந்தையோடு தலைமறைவாகி விட்டார் .இதனால் தன்னுடைய குழந்தையை காணாத அந்த தாய் அதிர்ச்சியடைந்தார் .பின்னர் இது பற்றி தன்னுடைய கணவரிடம் கூறினார் .உடனே அந்த பெண்ணின் கணவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியிலுள்ள 200கும் மேற்பட்ட சிசிடிவி கேமெராக்களை ஆராய்ந்து பார்த்தனர் .அப்போது அஸ்மிதா பாரதி என்ற பெண் குழந்தையோடு தப்பித்து செல்வதை கண்டனர்
பின்னர் போலீசார் அஸ்மிதா பாரதியையும் மற்றும் அவரது கணவரையும் பனஸ்கந்தா மாவட்டத்தில் கைது செய்தனர்.பிறகு அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் .

husband and wife
ஏழு பெண் குழந்தை பெற்ற மனைவி -ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட கணவர் -இருவரும் சேர்ந்து செய்த வேலை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது....

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன் முழு ஊரடங்கு அமலில்...

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...
- Advertisment -
TopTamilNews