ஆண்டவருக்கு நன்றி! கமல்ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்

 

ஆண்டவருக்கு நன்றி! கமல்ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்

‘மாநகரம்’ படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் வெளியாகி விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து எடுத்த கைதி படமும் வெற்றிபெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 64’ ஆன மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா பரவலால் தள்ளி போகி கொண்டே உள்ளது. இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பதை நேற்றே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தனது அடுத்த படத்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆண்டவருக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், once upon a time there lived a ghost என்ற வாசகத்துடன் துப்பாக்கிகளால் சித்தரிக்கப்பட்ட கமலின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ட்விட்டரில் #எவனென்றுநினைத்தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவே படத்தின் பெயராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.