மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார்… தலைவர்கள் இரங்கல்..

 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார்… தலைவர்கள் இரங்கல்..

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா. அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசித்து வந்தார். 92 வயதான ஸ்ரீகிருஷ்ணா பிர்லா கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று ஸ்ரீகிருஷ்ணா பிர்லா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார்… தலைவர்கள் இரங்கல்..
ஸ்ரீகிருஷ்ணா பிர்லா

ஸ்ரீகிருஷ்ணா பிர்லாவின் இறுதி சடங்கு இன்று காலையில் நடைபெறுகிறது. கோட்டாவில் உள்ள கிஷோர்புரா தகன மைதானத்தில் ஸ்ரீகிருஷ்ணாவின் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஓம் பிர்லா குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் முகுல் ராய் டிவிட்டரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜியின் தந்தை மரியாதைக்குரிய ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமான செய்தி தெரிந்ததும் நான் மிகுந்த வேதனை அடைகிறேன். ஸ்ரீ ஓம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி. என பதிவு செய்து இருந்தார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார்… தலைவர்கள் இரங்கல்..
சுப்ரியா சுலே

நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே டிவிட்டரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லாவின் மறைவு குறித்து மிகுந்த வருத்தம். அவர் அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும். பிர்லா குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும். மனமார்ந்த இரங்கல் என பதிவு செய்து இருந்தார்.