”ஜூன் 7 க்குப் பிறகும் 2 வாரங்கள் ஊடரங்கை நீட்டிக்க வேண்டும்”

 

”ஜூன் 7 க்குப் பிறகும் 2 வாரங்கள் ஊடரங்கை நீட்டிக்க வேண்டும்”

கொரோனா தொற்று பரவல் 5 சதவிகிதத்திற்கும் கீழே வரும் வரை கர்நாடகாவில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநிலத்தின் ஆலோசனை குழு அம்மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

”ஜூன் 7 க்குப் பிறகும் 2 வாரங்கள் ஊடரங்கை நீட்டிக்க வேண்டும்”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 82லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2,795 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழேயும், இறப்பு எண்ணிக்கை ஒரு சதவிகித த்திற்கு கீழேயும் வரும் வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது. வாழ்வாதாரத்தை விட வாழ்க்கை முக்கியம் என்பதால் இந்த பரிந்துரையை கர்நாடக அரசிடம் வழங்கி உள்ளதாக, குழுவின் தலைவர் எம்.கே.சுதர்சன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, கடந்த மாதம் 2 முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.