ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!

ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.16 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க கடந்த மார்ச் 24ம் தேதி இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் தளர்வு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு வந்தது.

ஊரடங்கை மீறி கார், பைக்கில் சுற்றித் திரிபவர்களை போலீசார் நிறுத்தி விசாரிக்கின்றனர். அவர்கள் தேவையான காரணத்துக்காக வெளியே வந்திருந்தால் அவர்களை அனுப்பிவிடுகின்றனர். வீட்டில் அடங்கியிருக்க முடியாமல் ஊர் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சத்து எழுபதாயிரம் பேர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். 5,78,854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களால் தேவைக்கு வெளியே வருபவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஊர் சுற்றியவர்களோடு சேர்ந்து அவசியத் தேவைக்கு மருந்து, பால் வாங்க வந்தவர்கள் கூட அடிபட்ட செய்தியை பார்த்து வருகிறோம். போலீஸ் நண்பர்களாக இருப்பதும், நமக்கு வில்லனாக மாறுவதும் நம்முடைய கையில்தான் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருங்கள் என்று அரசும், காவல் துறையினரும் கூறி வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் அபராதம், வாகன பறிமுதல், கைது போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.

- Advertisment -

Most Popular

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர்...

‘வைஃபை, டிவி’ அதிநவீன வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை; நாளை திறப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால், சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் விதமாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், அரங்கங்கள் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை...

கொரோனாவைக் காரணம் காட்டி ஏலக்காய் தோட்டத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் கேரளா! – விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி இடுக்கு மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களுக்கு செல்ல தமிழக விவசாயிகளை கேரள அரசு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம்...

மயிலாப்பூரில் மிகப்பிரபலமான ‘ஜன்னல் கடை’ உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடிய வகை வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீபத்தில் நெல்லையின் அடையாளமாகத் திகழும் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்...
Open

ttn

Close