பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை எவ்வளவு அபராதம் வசூலிப்பு தெரியுமா?

 

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை எவ்வளவு அபராதம் வசூலிப்பு தெரியுமா?

கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் ஓரளவு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இபாஸ் இல்லாமல் பிற மாநிலங்களுக்கோ, பிற மாவட்டங்களுக்கோ செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே செல்ல கூடாது என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசின் உத்தரவை மீறி வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தி இருப்பதன் பேரில், அபராதம் விதிக்கப்படும் வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை எவ்வளவு அபராதம் வசூலிப்பு தெரியுமா?

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.19.75 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொது முடக்க விதிகளை மீறிய 6.67 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.41 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 8.54 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.