விதிகளை மீறி ‘ஊரை சுற்றியவர்களிடம் இருந்து’ வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

 

விதிகளை மீறி ‘ஊரை சுற்றியவர்களிடம் இருந்து’ வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 31 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டும் அரசின் விதிகளை மீறி மக்கள் சுற்றித்திரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை பொது முடக்கத்தின் போது தேவையற்ற காரணங்களுக்குகாக வெளியே செல்வதால், காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி ‘ஊரை சுற்றியவர்களிடம் இருந்து’ வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

இந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.20.89 கோடி அபாரதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதே போல, ஊரடங்கை மீறிய 6.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியே சுற்றிய 9.73 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 8.81 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.