விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

 

விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது அமலில் இருக்கும் 7 ஆம் கட்ட தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வரும் 31 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. அதனால் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து இன்று மாலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டங்கள் முடிந்த பிறகு ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இத்தனை கோடியா?!

மக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்துள்ள நிலையில், விதிகளை மீறி பலர் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியதன் பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.21.90 கோடியாக அதிகரித்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுவரை விதிகளை மீறிய 6.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.98 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 9.01 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.