ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் சேவை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

 

ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் சேவை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நான்காம் கட்டமாக கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் சேவை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் இல்லை.

வெளியூர் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்தலங்கள் செல்ல இபாஸ் அவசியம்.

ஐந்து மாதத்திற்கு பிறகு ஒன்றாம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் ஓடும்.

வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி.

வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

தமிழகத்தில் இரவு 8 மணி வரை கடைகள் திறக்கலாம்.

வெளிநாடு, வெளி மாநிலங்களில் வருபவருக்கான இபாஸ் நடைமுறை தொடரும்.

வரும்1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி, மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி.

உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் சேவை அனுமதி

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி 75 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

ரிசார்ட்டுகள் கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் திறக்க அனுமதி.

திரையரங்கு திறக்க தற்போது உத்தரவு பிறப்பிக்கவில்லை.