கர்நாடகாவில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம்!

கர்நாடகாவில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம்!

கர்நாடகாவில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனை அடுத்து, அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் பெங்களூருவில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது, எனவே பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை இயங்காது.

கர்நாடகாவில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம்!

பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. பிற நாட்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள மண்டபங்கள், ஹோட்டல்களை கோவிட் மையங்களாக மாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கூடுதல் படுக்கைகள் தேவைப்பட்டால் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.