Home தமிழகம் நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

UNLOCK 1.0 என்ற பெயரில் தளர்வுகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

UNLOCK1 தளர்வுகள்:

 • ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி
 • திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது
 • பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது
 • சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்
 • ஜூன் 8 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
 • இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு
 • தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்
 • மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை
 • சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
 • பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்
 • கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி
 • அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது
 • மாநிலங்களுக்கு இடையே தனி நபர் பயணிப்பதற்கு இனிமேல் இ-பாஸ் பெற தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • ஒருவேளை சுகாதார காரணங்களுக்காக தனிநபர் பயணத்திற்கு தடை விதிக்க முடிவெடுத்தால், அதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முன்கூட்டியே விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு குறைந்த குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 முதல் முதல் கட்ட தளர்வுகள்: வழிபாட்டு தலங்கள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை செயல்படலாம்.

இரண்டாம் கட்ட தளர்வுகள்: பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவெடுக்கப்படும்.

மூன்றாம் கட்ட தளர்வுகள்: மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டு வருவது தொடர்பாக புதிய விதிமுறைகள் விரிவாக விரைவில் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான பார்கள், பொழுதுபோக்கு அரங்குகள் ஆகியவற்றை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக, அரசியல், விளையாட்டு, கலாசாரம் மற்றும் மத ரீதியிலான விழாக்களை நடத்தி கொள்வதற்கும் அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!