பொதுமுடக்க விதிமீறல்: ரூ.18 கோடியை நெருங்கும் அபராதம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வந்தனர். இதனிடையே நேற்று முன் தினம் குறிப்பிட்ட தேதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

corona virus

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.17. 90 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க விதிகளை மீறிய 6,33,555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 8,47,574 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 7,72,585 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Most Popular

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

தமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை...

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...
Do NOT follow this link or you will be banned from the site!