பொதுமுடக்க விதிமீறல்: ரூ.22 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்!

 

பொதுமுடக்க விதிமீறல்: ரூ.22 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்!

பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தவையே. இதில் இருந்து மக்களை காக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருப்பதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம், இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது.

பொதுமுடக்க விதிமீறல்: ரூ.22 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்!

அதனால் ஊரடங்கை நீடிப்பதா.. இல்லையா என்பது குறித்து நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனையின் முடிவில் ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது தமிழக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிது.

பொதுமுடக்க விதிமீறல்: ரூ.22 கோடியை நெருங்கும் வசூலிக்கப்பட்ட அபராதம்!

இந்த நிலையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.21.80 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறிய 6.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 9.96 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 8.99 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.